போராட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? - விவசாயிகளிடம் கருத்து கேட்கிறார் அய்யாக்கண்ணு

 
Published : Apr 19, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
போராட்டத்தை தொடரலாமா? வேண்டாமா? - விவசாயிகளிடம் கருத்து கேட்கிறார் அய்யாக்கண்ணு

சுருக்கம்

ayyakkannu asking opinion to farmers

டெல்லியில் 37 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை தொடரலாமா வேண்டாமா என விவசாயிகளிடம் கருத்து அய்யாக்கண்ணு கருத்து கேட்டு வருகிறார்.

வறட்சி நிவாரணம், வங்கி கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.

37 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், சினிமா பிரமுகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு தனி மாநிலத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு செயல்பட முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தொடரலாமா வேண்டாமா என தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.

அவர்களின் கருத்தை பொறுத்து போராட்டம் தொடருமா கைவிடப்படுமா என்பது தெரிய வரும். 

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
Tamil News Live today 26 December 2025: இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு! பயணிகள் எவ்வளவு கூடுதலாக செலுத்த வேண்டும்?