
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் 250 ஏக்கரில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவில் தான் ஜெயலலிதா அடிக்கடி தங்கி ஓய்வெடுப்பார்.
இந்த பங்களா குறித்து பல்வேறு சர்ச்சைகளும் அவ்வபோது எழுந்த வண்ணம் இருந்தன.
ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது கூட அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு எடுத்தபோது சிறுதாவூர் பங்களாவையே தேர்ந்தேடுத்தார்களாம்.
இதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொண்டு சிறுதாவூர் பங்களாவை தயார் செய்தார்களாம்.
ஜெயலிதா மறைவுக்கு பிறகும் அந்த பங்களாவில் ஏராளமான போலீசார் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், சிறுதாவூர் பங்களாவின் பின்புறம் உள்ள புல்வெளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.
இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் சிறுதாவூர் பங்களா நோக்கி விரைந்துள்ளனர்.