ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்த வேண்டும் - அரசு ஓய்வூதியர்கள்…

 
Published : Apr 19, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்த வேண்டும் - அரசு ஓய்வூதியர்கள்…

சுருக்கம்

Ru1000 become medically to raise monthly pensions state pension

நாகப்பட்டினம்

ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இணை செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாத மருத்துவப்படியை ரூ.1000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

ரேசன் கடைகளில் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும்

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் சௌரிராஜ் நன்றித் தெரிவித்தார். 

 

PREV
click me!

Recommended Stories

சிறுமியிடம் சில்மிஷம் செய்துவிட்டு எஸ்கேப்.. போலீசிக்கு தண்ணீ காட்டி குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்.. 5 மாதங்களில் தீர்ப்பு
அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!