
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். குற்றசாட்டு பதிவு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்திய டிடிவிக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தொலைகாட்சி மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் வாங்கியதி மொசடி செய்ததாக தற்போதைய அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஏழு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இரண்டு வழக்குகளில் இருந்து டிடிவியை நீதிமன்றம் விடுவித்தது. அதன்படி இன்னும் ஐந்து வழக்குகள் தினகரன் மீது நிலுவையில் உள்ளது.
இதுகுறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் நேரில் ஆஜரானார். ஆனால் இதுகுறித்த விசாரணையை மாலை 3 மணிக்கு ஒத்துவைத்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.
அதன்படி மாலை 3 மணிக்கு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது குற்றசாட்டு பதிவு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்திய டிடிவிக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றசாட்டி பதிவு செய்ய விடாமல் காலதாமதம் செய்து கொண்டே செல்கிறீர்கள் என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கூறும் அனைத்து குற்றசாட்டுகளும் பொய் என மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 10 ஆம் தேதிக்கு ஒத்துவைத்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.