அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்.. சீதா தேவிக்கு வாழை நார் புடவை அனுப்பிய அனகாபுத்தூர் நெசவு குழு..

By Ramya s  |  First Published Jan 17, 2024, 10:45 AM IST

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்னை அனகாபுத்தூர் இயற்கை வாழை நார் நெசவு குழுமம் சார்பில் 20 அடி நீளம் கொண்ட வாழை நார் புடவை அனுப்பப்பட்டுள்ளது.


சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இயற்கை நார் நெசவு குழுமம் செயல்பட்டு வருகிறது. வாழை, கற்றாழை, அன்னாசி, மூங்கில், ஆகியவற்றில் நாரை பிரித்தெடுத்து அதிலிருந்து புடவை, கைப்பை, பேண்ட், ஷர்ட் போன்ற பொருட்களை தயாரித்து வருகின்றனர். இங்கு தயார்செய்யப்படும் பொருட்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவு குழுமம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வாழைநார் புடவையை தயார் செய்து அனுப்ப திட்டமிட்டனர். இதற்காக கடந்த 10 நாட்களாக இரவு பகலாக புடவையை நெய்து ராமர் கோயில் வடிவடைப்புடன் கூடிய புடவையை தயார் செய்தனர்.

Tap to resize

Latest Videos

அயோத்தியில் விஐபி தரிசன டிக்கெட்... ராமர் பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றும் கேடி கும்பல்!

20 அடி நீளம், 4 அடி அகலத்துடன் உள்ள இந்த புடவையை தமிழ்நாடு வாழை உற்பத்தி சங்கம் மூலம் அயோத்திக்கு அனுப்பி உள்ளனர். சீதா தேவிக்கு சாற்றுவதற்காக இந்த வாழை நார் புடவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது என்று இயற்கை நார் குழுமத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான 7 நாள் சடங்குகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. ங்க உள்ளது. வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவுடன் இந்த சடங்குகள் முடிவடையும். அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

நெருங்கும் ராமர் கோவில் திறப்பு விழா.. அயோத்தியில் வீடு கட்ட நிலம் வாங்கிய அமிதாப்பச்சன் - விலை என்ன தெரியுமா?

இந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சாமியார்கள் கலந்துகொள்ள உள்ளனர். நாட்டின் பிற முக்கிய பிரமுகர்கள், சினிமா விளையாட்டு பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 7000 பேருக்கு இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

click me!