எலக்ட்ரிக் ஆட்டோவில் திடீரென பயணம் செய்த ஆஸ்திரேலியா, தமிழக அமைச்சர்கள்...என்ன காரணம் தெரியும்..?

Published : Jul 20, 2022, 12:36 PM IST
எலக்ட்ரிக் ஆட்டோவில் திடீரென பயணம் செய்த ஆஸ்திரேலியா, தமிழக அமைச்சர்கள்...என்ன காரணம் தெரியும்..?

சுருக்கம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக்  இருவரும் இணைந்து  எலக்ட்ரிக்  ஆட்டோ வாகனத்தில் திடீரென பயணம் செய்தனர்.  

ஆட்டோவில் ஆஸ்திரேலிய அமைச்சர்

காற்று மாசு காரணமாக சுற்று சூழல் மாசுப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை வாகனமாக மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். பசுமையான உலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில்  மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் இணைந்து சென்னையில் எலக்ட்ரிக் ஆட்டோ பயணம் செய்து அசத்தியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு பயணம் செய்தனர்.மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கான இந்த பாரம்பரிய சுற்றுப்பயணமானது, தாஜ் கோரமண்டல்  நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால்  வரையிலான ஐந்து கிலோமீட்டர் பயணத்தை 25 எலக்ட்ரிக் வாகனத்தின் மூலம் ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு சென்றனர். இவர்களுக்கு ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி இரவு விருந்து அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 

அனைவருக்கும் வீடு திட்டம்.. உடனே விண்ணப்பிக்கலாம்.. முந்துங்க மக்களே!

என்ன பாத்து எப்படி சொல்லுவ.. துணிச்சல் எங்கிருந்து வந்தது..சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிபதி

அமீர் மஹாலில் விருந்து

பசுமை மின்சார ஆட்டோ பேரணியில்  M Auto Electric Mobility நிறுவனர் யாசின் ஜவஹர் அலி, இணை இயக்குனர் மன்சூர் அலி கான் மற்றும்  மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகள்,பிரபலங்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மூலம் ஆஸ்திரேலியாவின் தொழில்துறை தொடர்புகளை வலுப்படுத்துவதும், இந்திய- ஆஸ்திரேலியா இடையே  வணிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாகன போக்குவரத்தின் போது சுற்றுச்சூழல்  மாசு படுவதில் இருந்து விடுபடும் நோக்கமாகவும்,   பசுமை மறுசுழற்சி ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தப் பயணம்  அமைந்தாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பிரபல கட்டுமான நிறுவனத்தில் ஐடி சோதனை...! 20 இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி