திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ள நிலையில் தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கியிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் ஆதிநாராயணன் போட்டியிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மருது சேனை அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் கார் மீது வெடிகுண்டு வீச்சு.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன்!
இந்நிலையில், நேற்று மதியம் தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்த போது திடீரென எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதி பெட்ரோல் குண்டை வீசி மர்ம தாக்குதல் நடத்திவிட்டு சென்றது. இதில், ஓட்டுநரின் சமார்த்தியத்தால் அதிஷ்டவசமாக ஆதிநாராயணன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.
இதையும் படிங்க: முன்னாள் முதல்வர் அரைவேக்காட்டு தனமாக பேசுவது நகைச்சுவையாக உள்ளது; எடப்பாடி மீது அண்ணாமலை அட்டாக்
இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.
இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள்…
சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என இபிஎஸ் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.