வெளியானது உதவி வனப் பாதுகாவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்... பதிவிறக்கம் செய்வது எப்படி?

Published : Apr 24, 2023, 11:30 PM IST
வெளியானது உதவி வனப் பாதுகாவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்... பதிவிறக்கம் செய்வது எப்படி?

சுருக்கம்

உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (கணினி வழித் தேர்வு) மே 5 ஆம் தேதி முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்  மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!