
திண்டுக்கல்
மின் இணைப்பு தர விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளரை ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காட்டில் மின்சார வாரிய அலுவலகம் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இங்கு உதவி பொறியாளராக விருதுநகரை சேர்ந்த மகேஷ்வரன் (41) என்பவர் பணியாற்றுகிறார்.
அதே பகுதியை சேர்ந்த விவசாயி விஜயராஜன் (22). இவர் தனது தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று பண்ணைக்காடு மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதனையடுத்து தோட்டத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால், ரூ.8 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என மகேஷ்வரன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராஜன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவலாளர்ளிடம் புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து ரசாயன பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை விஜயராஜனிடம் காவலாளர்கள் கொடுத்து மகேஷ்வரனிடம் கொடுக்கும்படி கூறினர். அவர் அந்த பணத்தை உதவி பொறியாளரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு காவாலாளர்கள் மகேஷ்வரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரிடம் அவர்களின் தோட்டங்கள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அவர் லஞ்சம் வாங்கியுள்ளது தெரியவந்தது.
இது குறித்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.