
தருமபுரி
தருமபுரியில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த வந்த கர்நாடக காவலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இருவரை தருமபுரி காவலாளர்கள் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்தது.
இது தொடர்பாக பி.பள்ளிப்பட்டியில் தங்கியிருந்த ஜான்சனிடம் விசாரணை நடத்துவதற்காக கர்நாடக மாநில காவலாளர்கள் வந்துள்ளனர்.
அப்போது, ஜான்சன் தரப்பினருக்கும், கர்நாடக காவலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில், கர்நாடக காவலாளர்கள் பயன்படுத்திய வாகனங்கள் சேதப்படுத்தியதாகவும், காவலாளர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன் விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில் இந்த தகராறில் தொடர்புடைய லூர்துபுரத்தைச் சேர்ந்த ராஜி மகன் ஜான்சன் (60), அதே ஊரைச் சேர்ந்த பவுல்ராஜ் முரளி (39) ஆகியோரை பொம்மிடி காவலாளர்கள் கைது செய்தனர்.