4 ஆயிரம் கோடியை ஏமாற்றிய சுரானா குழுமம்.. 113 கோடியை முடக்கிய அமலாக்கத்துறை !

By Raghupati R  |  First Published Aug 2, 2022, 6:29 PM IST

சென்னையை சேர்ந்த சுரானா குழுமம் ரூ.4ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்துள்ளது.


சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை, ஐ.டி.பி.ஐ மற்றும் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், 1301.76 கோடி ரூபாய் ஐ.டிபி.ஐ வங்கியில் இருந்தும்,சுரானா பவர் லிமிடெட் ஐ.டி.பி.ஐ வங்கியில் 1495.76 கோடி ரூபாய் கடனும், சுரானாகார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து கடன் பெற்று, இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த கடன் தொகையை சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது, அமலாக்கத்துறையும்  வழக்குப் பதிவு செய்தது.  இந்த வழக்கில் தொடர்புடைய நால்வரையும், இம்மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. 

இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்ட நால்வருக்கும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில் சுரானா குழுமத்துக்கு சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 75 சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளிடம் ரூ.3986 கோடி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக சுரானா நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

click me!