தமிழ்நாடு மருத்துவமனையில் 24 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 2018ம் ஆண்டு மின்சாரம் தாக்கியதில் தீக்காயங்களுக்கு ஆளானதால், தனது இரு கைகளையும் இழந்துள்ளார். அவரது தாயார் அவரை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கை மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு மாநில அரசு ஆதரவு பெற்ற மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவு செய்த மருத்துவர்களுக்கு, கடந்த மே 28ம் தேதி அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கை தானம் செய்பவர் பற்றிய தகவல் கிடைத்தது. தேவையான அனுமதியை சேகரித்த பிறகு, கைகள் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
மருத்துவ நிபுணர்கள் மூலம் வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் இன்ஸ்டிடியூட் இயக்குநரும் மூத்த ஆலோசகருமான எஸ் செல்வ சீதாராமன் தலைமையிலான டாக்டர்கள் குழு, எட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு எலும்பியல் மருத்துவர்கள், ஒரு வாஸ்குலர் சர்ஜன், நான்கு மயக்கவியல் நிபுணர்கள், ஒரு நரம்பியல் நிபுணர் மற்றும் 30 துணை மருத்துவ பணியாளர்கள் இஇதில் ஈடுபட்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மே 28ம் தேதி அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த நோயாளி நன்றாக இருக்கிறார். இதுகுறித்து கருது தெரிவித்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ‘மாநிலங்கள் முழுவதும் இத்தகைய குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களால் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. ஒரு குழுவாக இதை அடைவதில் மருத்துவர்கள் மிகவும் உன்னிப்பான அணுகுமுறையை எடுத்துள்ளனர். மூளை இறந்த நோயாளிகளின் கைகளை தானம் செய்வதற்கும், ஊனமுற்றோருக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !