
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்…கமலஹாசன் உள்ளிட்டோர் இரங்கல்…
அப்பாவின் சினேகிதர் என்ற புகழ்பெற்ற நாவலுக்காக 1996 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் தியகராஜன்.. தனது தந்தையின் மறைவுக்கு பின்னர், சென்னைக்கு வந்த அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். 1960-ம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அசோகமித்ரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 85.
கரைந்த நிழல்கள், அன்பின் பரிசு, தண்ணீர், மானசரோவர், ஒற்றன் போன்ற நாவல்களை எழுதியிள்ள அசோகமித்திரன் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 15 கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு அசோகமித்திரன் எழுதிய அப்பாவின் சினேகிதர் என்ற நாவலுக்காக ’சாகித்ய அகாடமி’ விருதை பெற்றுள்ளார். மேலும் இலக்கியச் சிந்தனை விருதையும் இருமுறை வென்றுள்ளார்.
அசோகமித்திரனின் மறைவுக்கு எழுத்தாளர்களும், திரை உலகினரரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து தமிழ் எழுத்துலகில் நிற்கும். அவரை வாசித்து, நேசித்து, சந்தித்து, பெருமை பெற்றவர்களில் நானும் ஒருவன். நன்றி அவரது படைப்புகளுக்கு,’’ என தெரிவித்துள்ளார்.