திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை தீபத் திருவிழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை தீபத் திருவிழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி, வரும் 11-ம் தேதி காவல் தெய்வ வழிபாட்டின் தொடக்கமாக, துர்க்கையம்மன் உற்சவமும், 12-ம் தேதி பிடாரியம்மன் உற்சவமும், 13-ம் தேதி விநாயகர் உற்சவமும் நடைபெறுகிறது.
undefined
அதைத்தொடர்ந்து, 14ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள், அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீப விழாவின், 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.
விழாவின் நிறைவாக, வரும் 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான அனைத்து பணிகளும், அண்ணாமலையார் கோயிலில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபமலையின் அடியொற்றி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு, மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச்சீட்டு (பாஸ்) பார் கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஏற்கனவே ஐகோர்ட் வழி காட்டுதல்படி 2 ஆயிரம் பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.