குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை... பொதுமக்கள் அதிர்ச்சி!

By vinoth kumar  |  First Published Dec 14, 2018, 10:36 AM IST

ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே நேற்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர். அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சுமார் 5 நாட்களே ஆன பெண் குழந்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு  திரண்டனர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் அங்கு சென்றார். பின்னர், குப்பை தொட்டியில் இருந்த குழந்தையை கைப்பற்றி, களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டது.

Tap to resize

Latest Videos

undefined

டாக்டர்ரின் பரிசோதனையில் குழந்தையின் எடை குறைவாக இருந்தது. இதையடுத்து, குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு, 881 விகிதமே உள்ளது. இதையொட்டி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த மாதம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு அதிகம் நடப்பது கண்டுபிடிக்கபட்டு 3 பேரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!