ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் மனைவி பொற்கொடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Jul 05, 2025, 02:04 PM IST
armstrong

சுருக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு த்ரிலிங் இருந்து வந்தது. இதுவரை 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். பின்னர் மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாக கூறி கட்சியின் மேலிடத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஒரு வாரத்தில் அக்கட்சியில் இருந்து பொற்கொடி நீக்கப்பட்டார்.

முதலாம் ஆண்டு நினைவு நாள்

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் திருவள்ளூர் மாவட்டம் போத்தூரில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலையில் நடந்தது. இதில் தொல். திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்து 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார். அந்த கொடியில் நீல நிறத்தாலான அக்கொடியின் நடுவில் பேனா ஏத்திய ஒற்றை யானை உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!