ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளின் செல்போனை ஹரிதரன் என்பவர் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரை போலீசாரை தேடிப்பிடித்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் இன்று கைது செய்ப்பட்டுள்ளார். உடைத்து வீசப்பட்ட செல்போன் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டின் முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மற்றொருவரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளின் செல்போனை ஹரிதரன் என்பவர் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரை போலீசாரை தேடிப்பிடித்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த ஹரிதரன் கடம்பத்தூர் பகுதி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் உள்ளிட்டோருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
வாஷிங் மிஷினுக்குள் நாகப்பாம்பு! நூலிழையில் உயிர் தப்பிய டெக்னீஷியன்!
ஹரிதரன் கூறியபடி, கொலையைத் திட்டமிட பயன்படுத்தப்பட்ட 5 செல்போன்கள் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் உடைத்து வீசப்பட்டுள்ளன. இதனால் போலீசார் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் உதவியுடன் ஒருநாள் முழுக்க ஆற்றில் தேடி 5 செல்போன்களின் பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர். கொலையாளிகள் இந்த செல்போன்களை தான் பயன்படுத்தி வந்தனர் என்று போலீசார் கூறுகின்றனர்.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும் பெண் தாதாவுமான அஞ்சலை வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். புளியந்தோப்பில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற போலீசார் சோதனையில் 5 செல்போன்கள், பென் டிரைவ், லேப்டாப், வங்கி பாஸ்புக், டெபிட், கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் மணப்பெண்ணாக மாறிய ஶ்ரீதிகா! செக்கச் சிவந்த சேலையில் ஆர்யனுடன் ப்ரீ வெட்டிங் போட்டோஸ்!