நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை மறுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக இருந்து வந்த சிடிஆர் நிர்மல் குமார், பேச்சாளர் ராஜ் மோகன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் அமைந்துள்ள பனையூர் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்! ஆசிரியர்கள் சாலையில் இறங்கி போராடுறாங்க மனம் இரங்கவில்லையா? சொல்வது யார் தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜுனாவுக்கும், துணைப் பொதுச்செயலாளராக பதவி நிர்மல் குமாருக்கும், கொள்கை பரப்பு செயலாளர் பதவி பேச்சாளர் ராஜ்மோகனுக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியை அலறவிட ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு! இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது?
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது அதிருப்தியில் இருந்து வரும் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், ஸ்டார் பேச்சாளருமான காளியம்மாளை திமுக, அதிமுகவுக்கு இழுக்க தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், காளியம்மாள் இன்று தவெகாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை! கோவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!
ஆனால் இந்த தகவலை காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த காளியம்மாள் உடல்நலக்குறைவால் நான் வீட்டில் ஓய்வில் உள்ளேன். நான் தவெகவில் இணைவதாக எந்த அனுமானத்தில் கூறுகின்றனர். மாற்றுக்கட்சியில் இணைவதாக இருந்த உங்களுக்கு முறைப்படி தெரிவிப்பேன் என்று கூறினார்.