பெண் போலீசார் குறித்து யூ டியூப் தளத்தில் அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்தனர்.
பெலிக்ஸ் யூடியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியதாக கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் போலீசார் குறித்து யூடியூப் தளத்தில் அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: என் தம்பி சவுக்கு சங்கரை முடக்க பார்க்கிறீர்களா? அவரு பேசியதற்கு பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்ததே தவறு! சீமான்!
இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்த வழக்கை தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு டெல்லியில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: எமன் ரூபத்தில் வந்த மாடு! ஹாலிவுட் பட பாணியில் மூன்று முறை பல்டி அடித்து மரத்தில் மோதிய கார்! 5 இளைஞர்கள் பலி!
இதனிடையே யூடியூப் சேனலில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவினரிடைய கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் செய்த வழக்கு விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்லப்படுகிறார்.