கோவை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான மிரட்டல் இ மெயிலால் விமான நிலையம் பரபரப்பு அடைந்தது. களத்தில் இறங்கிய மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்
நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களில் குண்டு வெடுக்கும் என மிரட்டல் இ மெயில் கடந்த வாரம் வந்தது. இந்த மெயிலில் சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அலர்ட் செய்யப்பட்டது.
undefined
வெடி குண்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் வெடி குண்டுகள் எதுவும் சிக்காத நிலையில், இது ஒரு புரளி என தகவல் வெளியானது. இந்த இ மெயில் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியோடு இ மெயில் அனுப்பியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு.?
இந்தநிலையில் மீண்டும் வெடி குண்டு மிரட்டல் தொடர்பான இ மெயில் வந்திருப்பது விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இன்று காலை வந்த இ-மெயிலில் கோவை விமான நிலைய கழிவறையில் வெடி குண்டு வைக்கப்ப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் விமான நிலைய வளாகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் இதே போல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.