மதுப்பிரியர்களே உஷார்... 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்... அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

By Raghupati RFirst Published Jan 7, 2022, 6:34 AM IST
Highlights

மதுப்பிரியர்களே உஷார் ! இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை பாதிப்பு சமீப வாரங்களாக கடுமையாக அதிகரித்து வந்த நிலையில்,  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 

தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொங்கல் பண்டிக்கைக்கு சில விலக்குகள் இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படு நடத்தப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். 

இருப்பினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுபான கடைகள், பார்கள் என அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புதுச்சேரி கலால்துறை துணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘திருவள்ளுவர் தினம்’ மற்றும் ‘வள்ளலார் ஜோதி தினம்’ ஆகிய தினங்களை முன்னிட்டு புதுச்சேரியில் வருகின்ற 15.01.2022 மற்றும் 18.01.2022 ஆகிய தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள், பார்கள், ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் அனைத்தும் மூடப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!