#Breaking : அரைமணி நேரத்தில் இரட்டை கொலை... சரமாரியான வெட்டு... செங்கல்பட்டில் பரபரப்பு!!

Published : Jan 06, 2022, 09:26 PM IST
#Breaking : அரைமணி நேரத்தில் இரட்டை கொலை... சரமாரியான வெட்டு... செங்கல்பட்டில் பரபரப்பு!!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரை மணிநேரத்திற்குள் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரை மணிநேரத்திற்குள் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் செங்கல்பட்டு கே.தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் என்பவர் டீக்கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார்.

அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால், சம்பவ இடத்திலேயே கார்த்தி துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, காய்கறி வியாபாரம் செய்து வரும் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவர் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே கும்பல் மகேஷை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடியது. இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர், தப்பியோடிய கும்பல் யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமயத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!