நித்தியானந்தாவிற்கு போட்டியாக திருவண்ணாமலையில் ஆசிரமம்...? அன்னபூரணி அம்மன் பக்தர்கள் உற்சாகம்..!

By Ajmal KhanFirst Published Apr 4, 2022, 11:11 AM IST
Highlights

நித்தியானாந்தா திருவண்ணாமலையில் ஆசிரமம் தொடங்கி தற்போது தனி தீவையே வாங்கிவிட்டார், அவரின் வழியில் திருவாண்ணாமலையில் புதிய ஆசிரமத்தை துவங்கியுள்ளார் அன்னபூரணி அம்மன்..!

பளபளக்கும் பட்டுச்சேலை அம்மன்

பளபளக்கும் பட்டுச்சேலையில் காட்சியளித்தபடி அன்னபூரணி அம்மன் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் ரசிக்க வைத்தது. அதே நேரத்தில் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்த்த பலர்  பலவிதமான விமர்சனங்களை செய்து வந்தார்கள். கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில்  அடுத்தவர் கணவரோடு வாழ்ந்து வந்த விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில்  அன்னபூரணி கலந்து கொண்டார். இது தான் அன்னபூரணியை பலரும் விமர்சிக்க காரணமாக அமைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சொகுசு இருக்கையில் அமர்ந்தபடி அன்னபூரணி சாமியார் பளபளக்கும் பட்டு சேலையில் புள்மேக்கப்புடன் மக்களுக்கு அருள்வாக்கும், ஆசி வழங்கும்  வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பலரும் பரப்பினார்கள். அதிலும் அன்னபூரணியின் அருளாசி வழங்கும் போது தனது வைப்ரேஷன் அருளாசி பக்தர்களை பரவசப்படுத்தியது. எப்படி அருளாசி வீடியோ பரபரப்பாக பேசப்பட்டதோ, அதே போல கள்ளகாதல் புகார் தொடர்பாக  தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான வீடியோவும் அதற்க்கு இணையாக பரப்பப்பட்டது.

நித்தியானந்தா போட்டியாக அன்னபூரணி

தன்னை ‘அன்னபூரணி அம்மன்’ எனக் கூறி, தானே ஆதிபராசக்தியின் அவதாரம் என மக்கள் மத்தியில் பேசிவந்தார்அன்னபூரணி . இதனையடுத்து  கடந்த   புத்தாண்டன்று "அம்மாவின் திவ்ய தரிசனம்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்  வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் இந்த நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் அன்னபூரணி மட்டுமில்லாமல் அவரது பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இனையடுத்து சில நாட்கள் அமைதியாக இருந்த அன்னபூரணி, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துள்ளார். அதில் உதித்த யோசனை தான் ஆசிரமம், ஏற்கனவே திருவண்ணாமலை பகுதியில் ஆசிரமம் அமைத்து தான் நித்தியானந்தா உலகம் முழுவதும் ஆசிரமம் தொடங்கினார்.  எனவே அதே போல தாமும் ஆசிரமம் அமைக்கலாம் என்ற சிந்தனையில் தற்போது ஆசிரமம் கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

மக்களுக்கு முக்தி கொடுக்க அருளாசி

திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் ஆசிரமத்தை தொடங்கியுள்ளார் அன்னபூரணி, தற்போது நிலம் வாங்கி அதில் குடிசை அமைத்து அருளாசி வழங்கும் பணியை தொடங்கியுள்ளார் அந்த ஆசிரமத்தில் அன்னபூரணியின் உரையை கேட்க ஏராளமான பக்தர்கள் கூடினர். அவர்களிடம் அருளாசி வழங்கி பேசிய அன்னபூரணி, ஆன்மிக பயிற்சி வழங்கி மக்களுக்கு முக்தி கொடுப்பதற்காகத்தான்   ஆசி வழங்கி வருவதாக கூறினார். தான் பிறக்கும் போதே சக்தியோடு பிறந்ததாக தெரிவித்த அன்னபூரணி தற்போது தான் சக்தி வெளிப்பட்டு உள்ளதாக கூறினார்.   


 

click me!