அரை நிர்வாணமாக தாக்கி வெளியே துரத்திய காதலன்.. தட்டிகேட்டதால் நாய்களை ஏவி கடிக்க வைத்த பயிற்சியாளர்.!

Published : Apr 04, 2022, 10:41 AM ISTUpdated : Apr 04, 2022, 10:50 AM IST
அரை நிர்வாணமாக தாக்கி வெளியே துரத்திய காதலன்.. தட்டிகேட்டதால் நாய்களை ஏவி கடிக்க வைத்த பயிற்சியாளர்.!

சுருக்கம்

அவரது ஆடை கிழிந்து அரை நிர்வாணத்துடன் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தாமரை செல்வி மற்றும் அவரது மகள்கள் நிவேதா (20), லத்திகா (10) ஆகியோர் ஓடி வந்து பார்த்தார். பின்னர் செந்தாமரை செல்வி, உதயகுமாரிடம் சென்று மனைவியை ஏன் அடிகிறீர்கள் என தட்டிக்கேட்டார். 

மனைவியை நடு இரவில் அரை நிர்வாணமாக தாக்கி வெளியே அனுப்பியதை தட்டிக்கேட்டதால் நாய்களை ஏவி சிறுமி உள்பட 3 பேரை கடிக்க வைத்த பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 நாய்கள் பயிற்சியாளர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை கெம்பண்ணன் வீதியை சேர்ந்தவர் உதயக்குமார்(45). இவர் ஆந்திராவில் நாய்களுக்கு பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவருடன் ஓடிசாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இதுவரை திருமணமாகவில்லை. இருப்பினும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

 

நடு இரவில் தாக்குதல்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயகுமாருக்கும் அவரது மனைவி சந்திரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த உதயகுமார், சந்திரமணியை கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவரது ஆடை கிழிந்து அரை நிர்வாணத்துடன் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே விரட்டியுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தாமரை செல்வி மற்றும் அவரது மகள்கள் நிவேதா (20), லத்திகா (10) ஆகியோர் ஓடி வந்து பார்த்தார். பின்னர் செந்தாமரை செல்வி, உதயகுமாரிடம் சென்று மனைவியை ஏன் அடிகிறீர்கள் என தட்டிக்கேட்டார். 

குதறிய நாய்

அப்போது மேலும் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வளர்க்கும் நாய்களை கடிக்க ஏவி விட்டார். நாய்கள் ஆவேசமாக சீறி பாய்ந்து அங்கிருந்த செந்தாமரை செல்வியின் மகள் நிவேதா, லத்திகா மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரையும் கடித்து குதறியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுனர். இதுகுறித்து செந்தாமரை செல்வி சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை ஏவிவிட்டு கடிக்க வைத்த உதயகுமாரை கைது சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கட்டம் கட்டும் திமுக..? ஸ்டாலினுக்காக களம் இறங்கும் இந்தியா கூட்டணி
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!