1-ம் முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு உண்டா?இல்லையா? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்..!

Published : Apr 04, 2022, 05:26 AM IST
1-ம் முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு உண்டா?இல்லையா? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

இந்த ஆண்டு குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்வு நடைபெற உள்ளது. 

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நிகழாண்டு இறுதித் தேர்வு உறுதியாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்

புதுக்கோட்டை மாவட்டம் பி.மாத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;-  இந்த ஆண்டு குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் தேர்வு நடைபெற உள்ளது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். 

நீட் தேர்வு

தேர்வு குறித்து இன்று அல்லது நாளை அறிவிப்புகள் வெளியாகும். தமிழக முதல்வரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!