
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்
கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும்” முதல்வர் ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார், பாராளுமன்றத்தின் மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு அநியாயம் நடக்கப் போவதாக எனக்கு தகவல் கிடைத்தது என்று கூறி இருக்கிறார்.
உடனடியாக அனைவரும் வாருங்கள் என 45 கட்சிகளை அழைத்து இருக்கிறார். முதல்வர் தனிப்பட்ட முறையில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். முதல்வர் கடிதம் எழுதியதால் மாநில தலைவராக அதை விளக்குகிற பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இன்று அமைச்சர் அமித்ஷா மிகவும் தெள்ளத் தெளிவாக, மறு சீரமைப்பு நடக்கும் பொழுது நடக்கும், அது நடக்கும்பொழுது எப்படி நடக்கும் என்பதை கூறி இருக்கிறார். இன்றைக்கு 543 சீட்டுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. மறு சீரமைப்பு வரும்பொழுது 543 ல் இருந்து அது 600, 700 என எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம்,
ஆனால் அது விகிதாச்சார அடிப்படையில் இருக்கும். காரணமாக ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம், உத்தரப்பிரதேசத்தில் 45 லட்சம் பேருக்கு ஒரு எம்பி இருக்கலாம், உயர்ந்த பின்பும் தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம். அதை தெள்ளத், தெளிவாக அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். 2024 தெலுங்கானா ஆந்திர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசின் எண்ணம் பலிக்காது, என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அதனால் முதலமைச்சரிடம் யார் இந்த தகவலை சொன்னார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு சீட் குறைய போகிறது என்று யார் கூறினார்கள் என்று நான் கேட்கிறேன்.
இதற்கான பதிலை நீங்கள் கூறவில்லை என்றால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தவறான தகவலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமா ? என்ற கேள்வியை முன் வைக்கிறோம்.
எதுக்கு தயங்குறீங்க? இதெல்லாம் சரிப்பட்டு வராது! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுக! அன்புமணி ராமதாஸ்!
அதே போல தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சகோதரர் விஜய் பேசும்பொழுது, மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டையும் குறை சொல்லி இருக்கிறார். Why Bro, what bro' எல்.கே.ஜி பசங்களை போன்று சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என கூறியிருக்கிறார்.
நான் விஜய் இடம் கேட்கிறேன், practice what you preach, why bro telling lies எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய குழந்தைகளுக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழி, ஆனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி, what bro practice what you preach bro , சொன்னதை நீங்கள் வாழ்க்கையில் எது போன்று நடந்து கொள்கிறீர்களோ, அதுபோன்று செய்யுங்கள் ப்ரோ என்று நான் விஜய் அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று கூறினார்
Getout எல்லாம் ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும், எங்கேயும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா ப்ரோ, விஜய் அவர்கள் இதை செய்ய வேண்டாம் என அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விஜயின் பவுன்சர்கள் குமுதம் ரிப்போர்ட்டரை தாக்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் : அந்தப் படத்தை நானும் பார்த்தேன், மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்ற பஞ்சாயத்துகள் வரக் கூடாது என்பதற்காக தான் பாதுகாப்பு கொடுக்கிறோம். அதற்காகத் தான் crpf ஐ பயன்படுத்துங்கள் என கூறுகிறோம். சி.ஆர்.பி.எப்.இல் இருந்து வரக் கூடியவர்கள் specially trained ஆட்களாக இருப்பார்கள். பவுன்சர்களுக்கு சில இடங்களில் அவர்கள் செய்தியாளர்களா என்பது கூட தெரியாது, நீங்கள் பத்திரிக்கையாளர்கள் முதல் ஆளாய் வர வேண்டும் என்று கூறுகிறீர்கள், நம்பிக்கை அந்த அளவுக்கு பத்திரிக்கையாளர்கள் மீது மரியாதை கொடுக்கும் போது அந்த அளவுக்கு நம்முடைய நடத்தையும் அதுபோன்று இருக்க வேண்டும் என்று கூறினார்.
2026-ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்; அமித்ஷா உறுதி!
2026 ல் தி.மு.க வை வீட்டுக்கு அனுப்பவும் எனக் கூறி இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, பதிலளித்த அண்ணாமலை “ இன்று நடைபெறும் மகா சிவராத்திரியை பற்றி அமைச்சர் அமித்ஷா ஈஷா யோகாவிற்கு செல்கிறார், இது போன்ற அற்புதமான நாளில் மூன்று கட்டிடத்தையும் திறந்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால் இன்று மூன்று கட்டிடங்களையும் திறந்து வைத்து இருக்கிறார்.
அமித்ஷா எதற்காக திமுக 2026 ல் வெளியே செல்ல வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறினார். எங்களுக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். வருகிற காலத்தில் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஒருமித்த கருத்தோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.