Modi Kabaddi League: ஒலிம்பிக்கில் கபாடி போட்டி இடம்பெறும் - அண்ணாமலை உறுதி

By Dinesh TG  |  First Published Sep 28, 2022, 10:02 AM IST

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது அதில் கபாடி போட்டியிம் இடம் பெறும், அந்த போட்டியில் இந்தியா தங்கம் வெல்லும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மதுரையில் நடைபெறும் மோடி கபாடி தொடர் இறுதி போட்டிக்கான தொடக்க விழா மதுரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்; விளையாட்டு மூலம் அரசியல் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த கபாடி போட்டி நடைபெற்றுவருகிறது.

முடிஞ்சா என்னை அரெஸ்ட் பன்னுங்க... சவால் விடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

Latest Videos

undefined

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது கபாடி போட்டியும் அதில் இடம்பெறும். அப்போது இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும். இந்த கபாடி போட்டி பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது, மதுரை மண்ணில் தான் இறுதி போட்டி நடைபெறவேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்று பிரமாண்டமாக கபாடி போட்டியை யாரும் நடத்தவில்லை என்றார். 

இந்தியாவை விளையாட்டு தேசமாக மாற்றணும்! மத்திய அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபினவ் பிந்த்ரா 5 ஆலோசனைகள்

மேலும் பேசுகையில் கபாடி போட்டி விளையாடுவதால் நல்ல மனிதர்களாக மாறுகின்றனர். இந்த இறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 10 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கவுள்ளோம். இதுவரை இந்த கபாடி போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் 61 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர், வீட்டில், நாட்டில் என்ன பிரச்சினை இருந்தாலும் விளையாட்டுப் போட்டியைப் பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கபாடி விளையாட்டுக்கான சென்டர் ஆப் எக்ஸ்லன்சை தமிழகத்திற்கு கொண்டுவருவது எங்களது பொறுப்பு. ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜாவை டெல்லி அழைத்துச்சென்று இதனை ஆவணம் செய்வோம் என்றார்.

click me!