சென்னை போரூர்- வளசரவாக்கத்தில் சரவணபவன் ஓட்டல் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் ஏசி சரியாக வேலை செய்யாததால் ஊழியர்கள் 4 பேர் மாடியில் உள்ள ஏசி சிலிண்டரில் கியாஸ் நிரப்பிக்கொண்டிருந்தனர்.
சென்னை போரூரில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஏசி கியாஸ் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர்- வளசரவாக்கத்தில் சரவணபவன் ஓட்டல் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் ஏசி சரியாக வேலை செய்யாததால் ஊழியர்கள் 4 பேர் மாடியில் உள்ள ஏசி சிலிண்டரில் கியாஸ் நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் ஓட்டலில் பணியாற்றி வரும் ஊழியர்களான பாலமுருகன், மணிகண்டன், கிரிஷ்குமார், ஆனந்தமுருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.