சென்னை மெட்ரோ பணியின் போது பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து.. பேருந்து மீது விழுந்த கம்பி.. 3 பேர் படுகாயம்..!

By vinoth kumarFirst Published Sep 27, 2022, 1:21 PM IST
Highlights

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக உயர்மட்ட பாதை, சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் மாநகர பேருந்து மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி அப்பளம் நொறுங்கி 3 பேர் படுகாயமடைந்தனர். 

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக உயர்மட்ட பாதை, சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதேபோல், ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மவுண்ட்- பூந்தமல்லி சலையின் நடுவே ராட்சத தூண்கள் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சுமார் 30 அடி உயரத்துக்கு ராட்சத கம்பிகளால் தூண் கட்டப்பட்டு இருந்தது. இதனை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தி கான்கீரிட் போடும் பணி நேற்று இரவு நடைபெற்றது. 

இதையும் படிங்க;- காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் கண்டெய்னர் லாரியில் இருந்த ராட்சத இரும்பு கம்பிகளை கிரேன் மூலம் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது கிரேன் மூலம் தூக்கியபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மாநகர பேருந்து மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

இதில், பேருந்து ஓட்டி வந்த டிரைவர் அய்யாதுரை (52), மற்றொரு டிரைவர் பூபாலன் (45) மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதையும் படிங்க;-  புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்

click me!