பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை.. சட்டவிரோத இயக்கமாக அறிவித்த மத்திய அரசு..!

By vinoth kumarFirst Published Sep 28, 2022, 7:29 AM IST
Highlights

தீவிரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தீவிரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல், தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் சோதனை அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ஐஏ உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை ஈடுபட்டார். அப்போது, பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய பாஜக அரசு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு அதை உறுதி செய்துள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!