ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் திமுகவினர் 3 பேருக்கு தொடர்பு.! ஏதோ ஒரு உண்மையை மறைக்க என்கவுன்டர்.? அண்ணாமலை சந்தேகம்

By Ajmal KhanFirst Published Jul 14, 2024, 2:07 PM IST
Highlights

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது என தெரிவித்துள்ள அண்ணாமலை, ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது என கூறியுள்ளார். 
 

ஆம்ஸ்ட்ராங் கொலை- என்கவுன்டர்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  வாக்குமூலம் கொடுத்திருந்தனர். இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய பங்கு வகித்த திருவெங்கடம் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாக கூறி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

Latest Videos

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். 

EPS : சரண் அடைந்தவரை என்கவுன்டர் செய்தது ஏன்.? கை விலங்கிடாதது ஏன்.? அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் எடப்பாடி

என்கவுன்டரில் சந்தேகம்- அண்ணாமலை

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. 

இந்த திருவேங்கடம் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை, காவல்துறை உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Armstrong Murder Video : ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிய கொலையாளிகள்.! ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்ட போலீஸ்
 

click me!