மு.க.ஸ்டாலினின் கையாலாகாத நிலை.. தமிழகத்தில் படுகொ@ல நடைபெறாத நாளே இல்லை - அண்ணாமலை

Published : Nov 10, 2025, 02:49 PM IST
Annamalai

சுருக்கம்

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுக அரசுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினின், கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி