பொறியியல் மாணவர்களுக்கு புதிய திட்டம்… அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்!!

By Narendran SFirst Published Aug 25, 2022, 5:27 PM IST
Highlights

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு மைனர் டிகிரி என்ற புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு மைனர் டிகிரி என்ற புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் வெவ்வேறு பாடங்களை எடுத்து படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இரண்டு பட்டப்படிப்பையும் நேரடி வகுப்புகளாக பயிலலாம் அல்லது வெவ்வேறு கல்லூரி நேரங்களில் சேர்ந்து படிக்கலாம் என்று யுஜிசி அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதற்கான முடிவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் புதிதாக ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி..! பிரபல வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை

அதாவது, இனி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு மைனர் டிகிரி என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பொறியியல் படிக்கும் மாணவர்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை பெற முடியும். அத்துடன் இதற்காக புதிதாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஃபின்டெக் மற்றும் பிளாக் செயின், பொது நிர்வாகம், தொழில் முனைவோர், டேட்டா அனலிஸ்ட், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட 5 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை சிவி சண்முகம் புகார்! அதிமுக அலுவலக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்-டிஜிபி

இந்த 5 பாடத்திலும் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு மைனர் டிகிரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் 3ம் ஆண்டு முதல் படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழர் மரபு, தமிழரும் தொழில்நுட்பமும் உள்ளிட்ட பாடங்களை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடங்களில் மாணவர்கள் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தமிழ் பாடங்களை தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் தங்களது பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

click me!