தமிழ் வழி பொறியியல் படிப்பு நிறுத்த உத்தரவு வாபஸ்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published May 25, 2023, 1:03 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  தமிழ் வழி பாடப்பிரிவுகளான  மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த உத்தரவை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.

தமிழ் வழியில் பொறியியல் படிப்பு

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்  தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது..அதன் படி 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக கூறியது. மேலும் 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளையும் நிறுத்தப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.இந்த பாடப்பரிவில் தமிழ் மொழியில் படிக்க மாணவர் சேர்க்கை அதிகளவு இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

உத்தரவு வாபஸ்- துணைவேந்தர்

இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  மாணவர்களிடையே தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இருக்கும்போது, இது போன்ற அறிவிப்புகள் தாய்மொழிக் கல்வியை நீர்த்துப் போகச் செய்கிறது என அரசியல் கட்சிகள் விமர்சித்து இருந்தன. இந்தநிலையில்  இந்த உத்தரவை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி படிப்பு நிறுத்தவில்லையென தெரிவித்தவர். சிவில் படிப்பில் தான் மாணவர்கள் அதிகளவு சேர விரும்பவில்லையென கூறினார். மேலும் 60 சீட் கொண்ட இடங்களில் 10க்கும் குறைவான மாணவர்களே இந்த படிப்பை படிப்பதாக தெரிவித்தார். எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்படுவதாக தெரிவித்த அவர், வரும் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை பொறுத்து அடுத்த ஆண்டு இந்த படிப்பை தொடருவதாக இல்லையா என்பது முடிவெடுக்கப்படும் என துனைவேந்தர் வேல்ராஜ் கூறினார். 

இதையும் படியுங்கள்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடும் திமுக.!தமிழ் வழி பொறியியல் படிப்பை நிறுத்தியது ஏன்.? அண்ணாமலை

click me!