மழையடித்தாலும் புயலடித்தாலும் நாளை தேர்வு கன்ஃபார்ம்..! அண்ணா பல்கலை திட்டவட்டம்...!

 
Published : Oct 30, 2017, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
மழையடித்தாலும் புயலடித்தாலும் நாளை தேர்வு கன்ஃபார்ம்..! அண்ணா பல்கலை திட்டவட்டம்...!

சுருக்கம்

Anna University examinations will be held tomorrow

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் எழும்பூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் எனவும் கனமழையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!