
பிக் பாஸ் ஜூலி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்ற உள்ளார். இவருடன் கோகுலும் தொகுத்து வழங்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், பொது மக்களில் ஒருவராக இவர் அறிமுகமானார். ஜூலி, செவிலியராக இருந்து பின்னர், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ் பெற்று, இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜூலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முன்னரே அவரது நடவடிக்கை சிலருக்கு பிடிக்காமல் போனது. இதனால் ஜூலியை வெறுக்க ஆரம்பித்தனர்.. ஆனாலும், ஜுலி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது இலக்கை நோக்கி சென்று கொண்டேதான் இருந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று ஜூலி தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றியைத் தொகுத்து வழங்குகிறார்.
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் ஜூலி தொகுப்பாளராக களமிறங்குகிறார். இவருடன் கோகுலும் இணைந்து தொகுத்து வழங்கப் போகிறார்.