பொறியியல் படிப்பு!! கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ல் தொடக்கம்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? அமைச்சர் அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 8, 2022, 2:25 PM IST
Highlights

பொறியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பொறியல் மாணவ சேர்க்கைகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொறியியல் படிப்பு விண்ணப்பம்:

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,” ஜூன் 20 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை பொறியல் படிப்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பின்னர் ஜூலை 20 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என்று கூறினார். அதே போல் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என்றும் ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அமைச்சர் கூறினார்.

கலந்தாய்வு தேதி அறிவிப்பு:

மேலும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும். பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் நடைபெறும். மேலும் தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படும். இதனிடையே நீட் தேர்வு முடிவு வந்த பிறகே பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்றும் முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி கிடையாது..அதிரடிஅறிவிப்பிற்கு காரணம் இதுதான்..பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

click me!