யூடியூபில் ஆன்மீக ஆட்டத்தை ஆரம்பித்த அன்னபூரணி... அன்னபூரணியின் அடுத்த அவதாரம்.. பிரமித்த பக்தர்கள்..

Published : Jan 02, 2022, 12:04 PM IST
யூடியூபில் ஆன்மீக ஆட்டத்தை ஆரம்பித்த அன்னபூரணி... அன்னபூரணியின் அடுத்த அவதாரம்.. பிரமித்த பக்தர்கள்..

சுருக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரலானவர் பெண் சாமியார் அன்னபூரணி.

இவர் தனியார் தொலைக்காடசி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மையில் கடந்த 2013ஆம் ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வளைதலத்தில் தான் ஆதிபராசக்தி அவதாரம் என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அன்னபூரணி குறித்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன. இந்நிலையில் அன்னபூரணி தன் மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாகவும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறி புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினார். இந்நிலையில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘நான் என்ன சொல்ல வரேன் என்பதை உணர்ந்து எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 

https://www.youtube.com/watch?v=kF04DULKvf8

ஒரு கனவு காணும் போது அது கனவு என்று உங்களுக்குத் தெரியாது. அது உண்மையை போலவே தெரியும். ஒரு இன்பமான கனவைக் கண்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஒரு துன்பமான கனவைக் கண்டால் வருத்தமாக இருப்பீர்கள். ஏனெனில் கனவு என்பது வெறும் வார்த்தை ஆகவும் படமாகவும் இல்லாமல் உங்களுடைய உணர்வோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக உங்களை உருமாற்ற கூடிய ஒன்றாக இருக்கிறது. 

உண்மை அந்த அளவுக்கு அது தத்ரூபமாக உண்மையாக இருக்கிறது. கனவு தானே ஏன் நேர்ல நம்ம பயப்படனும் அப்படின்னா அந்த தன்மை அந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கிறது. இதேபோல் இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒரு கனவுதான். கனவு எப்படி தூக்கத்தில் வருகிறதோ அதுபோல் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையானது உங்கள் மனதாலும் அறிவாலும் உருவாக்கப்பட்டது. 

வட்டம் உலக விஷயங்கள் தெரிய ஆரம்பித்தவுடனே ஒவ்வொருவரும் உங்களுக்கென்று தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் மனம் சார்ந்த விஷயங்கள் ஆகும் உங்கள் அறிவு சார்ந்த விஷயங்கள் ஆகும் உங்களுக்கு என்ன ஒரு உலகத்தை உருவாக்கி கிட்டு அதிலேயே உழன்று கொண்டு அதில் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள். 

சத்தியமா இதுதான் எதார்த்தமா? இதுதான் சத்தியமா? இதுதான் உண்மையான வாழ்க்கையா? எனக் கேட்டால் இது உண்மையான வாழ்க்கை இல்லை. எப்படி ஒரு கனவு கண்ட மனிதன் விழித்து கொண்டு எழுந்து இருக்கிறாரோ அதுபோல் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். 

எப்பொழுது விழித்து இருக்கிறீர்களோ அப்பொழுது தான் தெரியும் நாம் இவ்வளவு நாள் என்ன வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று 2022 ஆன, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தனது ஆன்மீக ஆட்டத்தை ஆட தொடங்கி இருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா. இனி என்னவாகுமோ ? என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Tamil News Live today 22 January 2026: திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. 11 பொதுபெட்டிகளுடன் புதிய ரயில்..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி