
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த 7ம் கட்ட பேச்சு வார்த்தை இன்று நடக்கிறது.
தொழிற்சங்கத்துக்கு இரண்டு பேர் என 47 தொழிற்சங்கத்தில் இருந்து 94 நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி, கடந்த முறை நடந்த பேச்சு வார்த்தையில், ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் செயலாளர் சின்னசாமி, பொருளாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், அண்ணா தொழிற்சங்க தலைவர் தாடி எம்.ராசு தமிழர் பேரவை தொழிற்சங்க நிர்வாகி என கூறிக்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். இதை பார்த்து மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் துணை கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி எம்.ராசு எந்த தொழிற்சங்க அடையாளத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள போகிறார் என இப்போதே தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக கட்சியை தொடர்ந்து, தொழிற்சங்கமும் இரண்டாக பிரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.