கோவை விமான நிலையத்தில் பரபரப்பு - 4 கிலோ தங்கம் பறிமுதல்

 
Published : May 27, 2017, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு - 4 கிலோ தங்கம் பறிமுதல்

சுருக்கம்

4 kg Gold seized at coimbatore international Airport

கோவை சர்வதேச வி்மான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது அவர் கொண்டு வந்த வாக்குவம் கிளினர், ஆம்ப்ளிபையர் உள்ளிட்ட சாதனங்களில் 3.9 கிலோ எடையுள்ள தங்கம் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்நபரை வருமான வரிபுலனாய்வுத் துறை வசம் ஒப்படைத்துள்ளனர். 

பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!