Vikravandi Dmk Candidate : விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு.! யார் இந்த அன்னியூர் சிவா.?

By Ajmal Khan  |  First Published Jun 11, 2024, 1:46 PM IST

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில்  திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. 


இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த  புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார், இதனால் மற்ற மாநில தேர்தலோடு விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது,  

Tap to resize

Latest Videos

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் செய்யும் தேதி ஜூன் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,  வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 21ஆம் தேதியும், ஜூன் 24ஆம் தேதி வேட்பு மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா

இதைத் தொடர்ந்து ஜூன் 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் மீண்டும் இறங்கியுள்ள நிலையில் திமுக முதல் ஆளாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி  திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னியூர் சிவா திமுகவின் விவசாய தொழிலாளர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திமுக சார்பாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கேற்றுள்ளார்,

DMK : அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து திடீர் நீக்கம்.! - காரணம் என்ன தெரியுமா.?

click me!