CUET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்.! 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு வேண்டும் - அன்புமணி

Published : Feb 15, 2023, 12:43 PM IST
CUET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்.! 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு வேண்டும் - அன்புமணி

சுருக்கம்

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில்  பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்களிக்க  வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 CUET நுழைவுத்தேர்வு

 CUET நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக  நடத்தப்படும் CUET நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அதனால், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களால் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை! தமிழகத்தில் 2021-இல் கொரோனா காரணமாக  பத்தாம் வகுப்பு  மாணவர்களுக்கு  தேர்வு நடத்தாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்விலும் இதே நிலை ஏற்பட்டது!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்.! இணைக்காதவர்களுக்கு ஏற்படும் சிக்கல் என்ன தெரியுமா?

தமிழக மாணவர்களுக்கு விலக்கு

பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதால், ஜே.இ.இ கூட்டு நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து  தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு தரப்பட்டது. அதே முயற்சி இப்போதும் மேற்கொள்ளப்பட வேண்டும்! CUET நுழைவுத்தேர்வு மட்டுமின்றி, அடுத்து நடைபெறவுள்ள நீட் தேர்விலும் இதே சிக்கல் ஏற்படக் கூடும். எனவே, CUET மற்றும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.! குரங்குகளை வைத்து கடிக்க வைக்கும் கொடூரம்..! ஆசிரமத்தில் நடந்தது என்ன.?
 

PREV
click me!

Recommended Stories

வெதர்மேன் சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கோடை மழை! இன்றும் தரமான சம்பவம் இருக்கா? இதோ குளு குளு அப்டேட்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்