
மின் இணைப்போடு ஆதார் எண் இணைப்பு
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவ. 15-ம் தேதி மின் வாரியம் தொடங்கியது. ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது.
இன்றே கடைசி நாள்
டிசம்பர் 31 ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு முறை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வரை 98% பேர் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். இன்றோடு பிப்(15) கால அவகாசம் முடிவடைவதால் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கண்டனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்றே தங்களது ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மீண்டும் அவகாசம் வழங்கப்படுமா.?
மின் இணைப்புகளுடன் எந்த ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வசதி இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவே இதனை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் மீண்டும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இருந்தாலும் தற்போது வரை இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்