Anbumani : கண்ணைக் கட்டிக் கொண்டு உறியடித்து விளையாடிய அன்புமணி.. வைரலாகும் வீடியோ

Published : Jan 18, 2024, 01:21 PM ISTUpdated : Jan 18, 2024, 01:26 PM IST
Anbumani : கண்ணைக் கட்டிக் கொண்டு உறியடித்து விளையாடிய அன்புமணி.. வைரலாகும் வீடியோ

சுருக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புமணி கண்ணை கட்டிக்கொண்டு உறியடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

குடும்பத்தோடு பொங்கல் விழா கொண்டாடிய அன்புமணி

விவசாயத்திற்கும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை பொதுமக்கள் வணங்கி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இதனையொட்டி மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் என தொடர் கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த வகையில் பல்வேறு கிராமங்களில் விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். இதே போன்று பாமக தலைவர் அன்புமணியும் பொங்கல் கொண்டாட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

உறியடி போட்டியில் அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் குடும்பத்தோடு தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது குடும்பத்தோடு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அன்புமணிக்கு அவரது மகள் கண்ணை கட்டிவிடுகிறார். இதனை தொடர்ந்து கண் தெரிகிறதா இல்லையா.? என கண்டு பிடிக்க சிறுமி ஒருவர் கையில் விரல்களை காட்டி எத்தனை என கேட்கிறார்.

உறியை உடைத்த அன்புமணி

இதற்கு சரியாக தெரியவில்லையென அன்புமணி கூறுகிறார். இதனை தொடர்ந்து அன்புமணியை சுற்றி விடும் மகள், இதனை தொடர்ந்து தோட்டத்தில் கட்டப்பட்ட உறியை அடிக்க தட்டித்தடுமாறு மெதுவாக செல்லும் அன்புமணி கடைசியில் குறியை அடித்து உடைத்து விடுகிறார். இந்த விடியோ தான் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது 

இதையும் படியுங்கள்

காருக்கு பதிலாக அரசு வேலை கொடுங்க... ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய இயக்குனர் அமீர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!