தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் ரசிகரான கோபி கிருஷ்ணா கடலூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோனிக்காக வீட்டையையே மஞ்சளாக மாற்றிய ரசிகர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே கேப்டனான எம்எஸ் தோனிக்கு இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் தீவிர ரசிகர். தோனி மற்றும் சிஎஸ்கேவிற்காக தனது வீட்டை முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் மாற்றி வடிவமைத்துள்ளார். இவரது வீடு முழுவதும் தோனியின் புகைப்படமே இருக்கும். இதனை பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்தும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் அவரது வீட்டிற்கு வந்து செல்வார்கள். இந்தநிலையில் கோபி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்ட சம்பம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தோனி ரசிகர் தற்கொலை
கோபி கிருஷ்ணாவிற்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (வயது 10) மற்றும் சக்திதரன் (வயது 8) என்ற மகன்கள் உள்ள நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் உடலை கைப்பற்றி ராமநத்தம் போலீசாரிடம் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இதனை தொடர்ந்த போலீசார் கோபி கிருஷ்ணாவின் மரணம் கொலையா.?அல்லது தற்கொலையா.? என விசாரணை நடத்தியதில் நேற்று இரவு கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கோபி கிருஷ்ணனுக்கும் அதோ ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததாக தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதன்காரணமாக விளையாட்டு போட்டியில் தாகறாறு ஏற்பட்டுள்ளது இதில் கோபிகிருஷ்ணனை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோபி கிருஷ்ணன் அதிகாலை வீட்டில் மின் விசிறியில் சடலமாக தொங்கி உள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கோபி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்