ஆசிரியர்களுக்கு 4 மாதமாக ஊதியம் இல்லை.! இனியும் காலதாமதம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது- அன்புமணி

By Ajmal Khan  |  First Published Mar 28, 2023, 9:08 AM IST

பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்கள் பணி கலந்தாய்வு

கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கதவில்லையென தகவல் வெளியானது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் 29.11.2022-ஆம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில்  பெரும்பான்மையினர் குடும்பத்துடன் புதிய பணியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்;

Tap to resize

Latest Videos

இனி இப்படி பேச மாட்டேன்..! நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி- நிபந்தனை முன் ஜாமின் வழங்கிய நீதிபதி

4 மாதமாக ஊதியம் இல்லை

சிலர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில்  அவர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் (IFHRMS) பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.  ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்ய இவ்வளவு காலம் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழ்நாட்டில் 29.11.2022-ஆம் நாள் நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வு மூலம் பல்வேறு பள்ளிகளில் அமர்த்தப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. பணி செய்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது சரியல்ல. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது!(1/4)

— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss)

 

உடனடியாக ஊதியம் வழங்கிடுக

மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களின் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில்  பதிவேற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

சென்னையில் பயங்கரம்.. அதிமுக பகுதி செயலாளரை விரட்டி விரட்டி கொலை செய்த மர்ம கும்பல்.. இதுதான் காரணமா?

 

click me!