மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? கேள்வி மேல் கேள்வி கேட்கும் அன்புமணி

Published : Aug 12, 2025, 12:05 PM IST
MK Stalin

சுருக்கம்

பழனி முருகன் கோயிலில் முருகப் பெருமான் வரலாறு எனக்கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு. 

Palani Murugan temple history : முருகப் பெருமான் வரலாறு எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் பாடும் புத்தகம் 2700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2700 ரூபாய்க்கு மாநாட்டு மலர்

அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ’ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!