அனந்தபுரி, நெல்லை - நாகர்கோவில் ரயில்கள் கால அட்டவணையில் திருத்தம்

By SG Balan  |  First Published Jul 1, 2023, 10:49 PM IST

நெல்லை - நாகர்கோவில் ரயில் மற்றும் சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளன.


சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை - நாகர்கோவில் ரயில்கள் இயக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஜூலை 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில்கள் இயக்கப்படும் வேகம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளா மாநிலம் கொல்லத்துக்கு தினமும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகமாகிறது. இந்த மாற்றம் வரும் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதால் அதன் கால அட்டவணையும் அன்றிலிருந்து மாறுகிறது.

Tap to resize

Latest Videos

சென்னை எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இரவு 8.10 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 6.30 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வந்து 6.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும். இதற்கு முன் 6.45 மணிக்கு வந்து 6.50க்கு புறப்பட்ட நிலையில், இனி 15 நிமிடம் சீக்கிரம் வந்து செல்லும்.

ஒருநாள் ஊக்கை விழுங்கிவிட்டேன்... கொளத்தூரில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட முதல்வர்

நாங்குநேரிக்கு 7.03 மணிக்கும், வள்ளியூருக்கு 7.15 மணிக்கும், ஆரல்வாய்மொழிக்கு 7.38 மணிக்கும், நாகர்கோவில் டவுனுக்கு 8.07 மணிக்கும் வந்துசேரும். இந்த ரயில் இதுவரை இயக்கப்படும் நேரத்தைவிட 5 நிமிடங்கள் முன்னதாக காலை 11.40 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

தினமும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் வழக்கமாக காலை 6.35 மணிக்கு புறப்படும். ஆனால், வரும் 7ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில் 35 நிமிடம் தாமதமாக காலை 7.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். நாங்குநேரிக்கு 7.49 மணிக்கும், வள்ளியூர்க்கு 7.52 மணிக்கும், வடக்கு பணகுடிக்கு 8.03 மணிக்கும், காவல்கிணறுக்கு 8.09 மணிக்கும், ஆரல்வாய்மொழிக்கு 8.21 மணிக்கும், தோவாளைக்கு 8.26 மணிக்கும் வந்து செல்லும்.

இறுதியாக 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பை அடையும். இதுவரை காலை 8.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைந்த நிலையில், 7ஆம் தேதியில் இருந்து 50 நிமிடம் தாமதமாகச் சென்றடையும்.

ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் உயர்வு! ரூ.1.61 லட்சம் வசூல்!

click me!