
நிலப்பிரச்சனையில் தாக்குதல்
காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் அவில்தாராக பணியாற்றி வருபவர் பிரபாகரன், இவர் நேற்று முன் தினம் சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நிலப்பிரச்சனை தொடர்பாக தனது மனைவியை 20க்கும் மேற்பட்டவர்கள் அரைநிர்வாணம் செய்து தாக்கியதாக மண்டியிட்டு கண்ணீரோடு புகார் தெரிவித்தார். மேலும் தனது மனைவியை காப்பாற்றுமாறு திருவண்ணாமலை மாவட்ட எஸ்பிக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ராணுவ வீரரின் மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி தெரிவித்திருந்தார்.
அரை நிர்வாணம் செய்து தாக்குதல்
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது ராணுவ வீரர் பிரகரனின் மனைவியான கீர்த்தியின் தந்தை செல்வராஜ் அந்த பகுதியில் பேன்சி கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளர் ராமு பல முறை கூறியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துநிலையில் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சனையின் போது செல்வராஜின் மகன் ஜீவா கத்தியால் கடை உரிமையாளர் ராமுவை தலையில் தாக்கியுள்ளார். ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்களை சந்தவாசல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் தனது நண்பர் வினோத்திடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஆடியோவால் வெளியான நாடகம்
இறங்கி வேலை செஞ்சிருக்கேன், தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் ஆக போகுது. ஒன்னுக்கு இரண்டாக சொல்லுங்க, அதில் இந்த பிரச்சனையை நாடு முழுவதும் பெரிது படுத்திவிட்டேன். பாஜக, நாம் தமிழர் என அனைவருக்கும் பரப்பிவிட்டேன். இதுவரை எனது வீடியோவை 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விசாரணையின் போது அரை நிர்வாணம் செய்து அடித்தார்கள் என கூற வேண்டும். மேலும் அமைச்சர்கள், முதலமைச்சர் அலுவலகம் என பலரும் ஆதரவாக பேசியுள்ளனர்.
ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்
இந்த பிரச்சனையை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். கத்தியால் தாக்கியதாக கூற வேண்டாம். பிரச்சனையை மிகைப்படுத்தி விசாரணையில் கூறுங்கள், கடை உரிமையாளர்களை காவல்துறை நன்றாக பார்த்துக்கொள்ளும். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக எல்லோரையும் தூக்கிவிடுவார்கள் என ராணுவ வீரர் பிரபாகர் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்