சிறையில் சிறப்பு சொகுசு வசதி: வழக்கை ரத்து செய்ய கோரி சசிகலா மனுத்தாக்கல்!

Published : Jun 13, 2023, 01:50 PM IST
சிறையில் சிறப்பு சொகுசு வசதி: வழக்கை ரத்து செய்ய கோரி சசிகலா மனுத்தாக்கல்!

சுருக்கம்

சிறையில் சிறப்பு சொகுசு வசதி தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் மீதான சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தண்டனை வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

அதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார்.

முன்னதாக, பெங்களூரு சிறையில் இருந்த போது, சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அதாவது சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா ஐபிஎஸ், அடுத்தடுதடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் யார் தெரியுமா.? தமிழக அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த நிலையில், சிறையில் சிறப்பு சொகுசு வசதி தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு சிறப்பு சொகுசு வசதி  வழங்கியதாக, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு, லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

சசிகலா தாக்கல் செய்துள்ள மனுவில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் தனக்கு சிறப்பு சொகுசு வசதி அளிக்கப்படுவதாக ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபா குற்றம் சாட்டியிருந்தார். அதன்பிறகு, அரசு உத்தரவுப்படி, ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, 2017 அக்டோபர் 21ஆம் தேதி அளித்த அறிக்கையை, 2018 பிப்ரவரி 26ஆம் தேதி மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.” என கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!